Our Feeds


Tuesday, April 4, 2023

Anonymous

நட்டமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் - SLPP, MP எஸ்.பி.திஸாநாயக்க

 



(இராஜதுரை ஹஷான்)


நட்டமடையும் அரச நிறுவனங்களினால் எவருக்கும் பயனில்லை ஆகவே கொள்கை ரீதியில் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும், ஆகவே நட்டமடையும் அரச நிறுவனங்களை நிச்சயம் தனியார் மயப்படுத்த வேண்டும் என்பதை உறுதியுடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் திங்கட்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டமூலம் தற்போது பிரதான பேசுபொருளாக உள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் தரப்பினர் ஜனநாயகம் மற்றும் நாட்டின் சட்டம் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பத்து செயற்படுவார்களாக  இருந்தால் பயங்கரவாத தடைச்சட்டமூலம் தொடர்பில் அச்சமடைய வேண்டியதில்லை.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டமூலத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கலக்கமடைந்துள்ளது, ஏனெனில் மக்கள் விடுதலை ஆரம்ப காலத்தில் இருந்து பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டது.தற்போதும் ஈடுபடுகிறது.

மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக செயற்பட்டால் அதன் பெறுபேறு அரசாங்கத்திற்கு எதிரானதாக அமையும்.

ஆகவே அரசாங்கம் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.தேசிய பாதுகப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு சார் சட்டம் உருவாக்கப்படும்.

நட்டமடையும் அரச நிறுவனங்களினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள், ஆகவே இந்நிறுவனங்கள் தொடர்பில் கொள்கை ரீதியில் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். ஆகவே நட்டடையம் அரச நிறுவனங்கள் நிச்சயம் தனியார் மயப்படுத்த வேண்டும் என்பதை உறுதியுடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »