நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன கூறியதாகவும்,ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரே ஒரு எம்.பி. பதவியே உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 50 எம்.பி.க்கள் உள்ளனர் என்றும்,ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச செயற்பட்டு வருகிறார் எனவும்,
50 எம்.பி.க்கள் உள்ள கட்சியின் தலைவர்,ஒரு எம்.பி.யை கொண்ட கட்சிக்கு பிரதித் தலைவராகும் வழக்கம் உள்ளதா?என பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கு வேண்டுமானால் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுப்பதாகவும்,இல்லையேல் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக இருக்கும் ருவான் விஜேவர்தனவை ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பதவியை ஏற்குமாறு தாங்கள் அழைப்பு விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.