எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் போட்டியிட மாபெரும் கூட்டணியை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதுடன், ஐ.தே.க மற்றும் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தக் கூட்டணியுடன் கூட்டணிக்கட்சிகளாக இணைவதை நாம் வரவேற்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரவித்தார்.
”ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் செயற்படும் இப்புதிய கூட்டணியுடன் ஜனாதிபதி ரணில் மற்றும் ஐ.தே.க இணைய முடியும். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் செயற்படும் இந்தக் கூட்டணியுடன் ஐ.தே.க ஒரு சிறுபான்மை கட்சியாக இணையலாம்”, என ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
அடிப்படை வாக்குத்தளம் இல்லாததால் ஐ.தே.க ஒரு சிறுபான்மைக் கட்சியாகும்.
இந்தக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவே போட்டியிடுவார். அவரை எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் என அழைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.