எதிர்காலத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு தமக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பண்டாரகம தனியார் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் முதன்முறையாக அமைச்சரானார். நாங்கள் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் வந்ததற்குக் காரணம் எங்களுடைய மாறுதலே, இல்லையேல் அந்த நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறாது.