அமெரிக்காவின் RM Parks-Shell நிறுவனத்துடன் இடம்பெற்ற இணைய வழிசந்திப்பில், இலங்கையில் அந்நிறுவனத்தின் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிப்பது குறித்து தீர்மானமொன்று எட்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி, மே மாத நடுப்பகுதியில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும், ஜூன் முதலாவது வாரத்தில் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக கூறினார்.
இதேவேளை, கடந்த வாரம் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்துக்கு விஜயம் செய்த RM Parks-Shell தொழில்நுட்ப அதிகாரிகள், சர்வதேச தரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப முனையத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் முன்வந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.