இந்த வருடத்திற்குள் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் கட்டணத்தை செலுத்துவதற்கு பயணிகளுக்கு QR முறைமை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையின் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 7 டிப்போக்களுக்கான 26 பஸ்களை விநியோகிக்கும் நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று (09) இடம்பெற்றது.