Our Feeds


Sunday, April 2, 2023

ShortNews Admin

PHOTOS: கத்தார் வாழ் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி OBA வின் வருடாந்த இப்தார் - கத்தாருக்கான இலங்கைத் தூதுவர் பங்கேற்பு



(எம்.என்.எம்.அப்ராஸ்)


கத்தார் வாழ் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும், பொது கூட்டமும் மற்றும் புதிய நிர்வாக தெரிவும் கத்தார் ஸ்டபர்ட் ஶ்ரீலங்கா பாடசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை(31) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்வின் ஆரம்பமாக அப்துல்லா ஷபி முகம்மது பாஹிம் கிராத் ஓதி ஆரம்பித்து வைத்தார்.

இதனையடுத்து வரவேற்புரை கத்தார் கிளையின் செயலாளர் மொஹமட் பாயிஸ் ஆதம்பாவா உரை நிகழ்த்தினார். மேலும் கத்தார் கிளையின் தலைவர் பைரூஸ் தலைமை உரை நிகழ்த்தினார்.

பின்னர் பொறியாளர் நயீமுதீன் நோன்பின் முக்கியத்துவம் பற்றி  உரையாற்றியதுடன், மேலும் இப்தார் நிகழ்வு முடிந்த பின்னர் கத்தார் வாழ் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 2023ஆம் ஆண்டிற்க்கான புதிய நிர்வாக தெரிவும் நடைபெற்றது.

இதன் போது புதிய தலைவராக மொஹமட் பாயிஸ் ஆதம்பாவா,செயலாளராக சர்ஜூன் பொருளாளராக எம்.எல்.எம்.ரௌசுல் இலாஹி,உப தலைவராக சினான்,உதவிச் செயலாளராக எம்.எம்.தில்ஷான்,உதவிப் பொருளாளராக ஏ.எம்.எம்.பரஸாத் இஹ்ஸான்,ஊடக செயலாளராக அஸ்வர் ரிஸ்வி ஆகியோர் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் நிர்வாக குழு உறுப்பினர்களாக ஏ.ஆர்.எம்.ரபீஸ்,எம்.எச்.எம்.சர்ஜூன், ஏ.எச்.எம்.ஜஃப்ரான்,எம்.எப்.எம் பிர்தௌஸ்,ஏ.டபிள்யூ.அன்வர்,ஏ.எம்.பாஹிம்,எம்.சி.எம்.ரியால்,ஜே.எம்.பாசித் மற்றும் ஆலோசகர்களாக முன்னாள் கத்தார் கிளையின் தலைவர் பைரூஸ்,பொறியியலாளர் எஸ்.நயீமுதீன்,வைத்தியர் எம்.ரிஸான் ஜெமீல்,பிரோஸ்,ஆப்தீன்,பொறியியலாளர் மஃபீல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

குறித்த நிகழ்வின் தொகுப்பினை ஏ.பி.எம்.ரினோஸ் மேற்க்கொண்டார். 














Subscribe to this Blog via Email :
Previous
Next Post »