மூழ்கும் கப்பலில் ஏறும் அளவுக்கு முட்டாள்கள் எம்.பி.க்கள் இல்லை என்றும், அரசாங்கத்தின் எம்.பி.க்கள் குழு ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்ளப் போவதாகவும், அவர்களுக்கு கட்சி உறுப்புரிமையும், ஆசனமும் வழங்கப்படும் என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, கல்கமுவில் தெரிவித்தார்.
கல்கமுவ பிரைட் மண்டபத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ள நாட்டைக் கட்டியெழுப்பும் பொருளாதார வேலைத்திட்டம் வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை. நாட்டைக் கட்டியெழுப்பும் பொருளாதாரத் திட்டத்தை வெளிப்படுத்தி எம்முடன் வெளிப்படையான உரையாடலுக்கு வருமாறு நாம் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுகின்றோம். மக்களை ஏமாற்றும் திசைகாட்டியை மக்கள் ஏற்கனவே நிராகரித்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவை வேண்டாம் என்று வேறு கட்சியை உருவாக்கிவிட்டு மீண்டும் அதன் பின்னால் சென்றால் அது ஆச்சரியம்தான். அரசாங்கத்தில் உள்ள பலர் எமது கட்சியில் இணையுமாறு எங்களுடன் பேசியுள்ளனர். அவர்களை எங்கள் கட்சியில் சேரச் சொன்னோம். பின்னர் அவர்கள் கட்சியில் சேர்க்கப்படுகிறார்கள். அவர்களில் சிலருக்கு எங்கள் கட்சியின் ஆசன அமைப்பாளர் பதவியும் கிடைக்கலாம்…”