Our Feeds


Saturday, April 8, 2023

ShortNews Admin

ஆயுத வியாபாரம் & LTTE மீள் எழுச்சிக்கு முயற்சி, போதைக் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டில் - இந்தியாவில் ஒருவர் கைது.



ந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சட்ட விரோத போதைப்பொருள், ஆயுத வியாபாரம் என்பவற்றில் ஈடுபட்டதாகவும், விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சிக்கு பாடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு சென்னையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


இந்த நபர் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினால் (NIA) கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சென்னையில் இந்த சந்தேக நபருக்கு சொந்தமான பல இடங்களில் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு (NIA) சோதனை நடத்தியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சோதனையின்போது பெருந்தொகை பணம், தங்கக் கட்டிகள், டிஜிட்டல் சாதனங்கள், போதைப்பொருள் மற்றும் சில ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு கைப்பற்றியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மோசடி தொடர்பான விசாரணைகளை இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு ஆரம்பித்தது. 

இந்நிலையில், இதுவரை 14 சந்தேக நபர்களை இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில், தமிழகம் முழுவதும் 21 இடங்களில் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட சோதனையில் 13 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »