இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் குறித்த விவாதம் மூன்றாவது நாளாக இன்று (28) பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது.
விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடைபெறும்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் இன்று (28) நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சி அதற்கு ஆதரவாக வாக்களிக்கும் என அவர் நேற்று (27) குறிப்பிட்டிருந்தார்.