சர்வதேச நாணய நிதியத்தின், நீடிக்கப்பட்ட நிதிவசதித் திட்டம் தொடர்பான யோசனையை நாடாளுமன்றில் அங்கீகரிக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிப்பதாக, அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புளத்சிங்கள பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.