பிரதான எதிர்க்கட்சியான SJB யின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களும், பொருளாதார நிபுணர்களுமான கலாநிதி ஹர்ஷத சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோர் ஜனாதிபதி ரனில் தலைமையிலான அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக இன்று டெய்லி மிரர் செய்திப் பத்திரிக்கை வெளியிட்ட பிரதான செய்தியை கலாநிதி ஹர்ஷத சில்வா மறுத்துள்ளார்.
ட்விட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ள கலாநிதி ஹர்ஷத சில்வா டெய்லி மிரர் வெளியிட்டுள்ள செய்தி முழுக்க முழுக்க கற்பனையானது என்று தெரிவித்துள்ளார்.
Looks like the @Dailymirror_SL knows more about my life than myself. Yes, I said reforms are essential and current #SriLanka plan w @IMFLive is similar to our Blueprint except for their total lack of focus on social safety nets. But all of this stuff is pure conjecture 😁 pic.twitter.com/PTFVJf2M09
— Harsha de Silva (@HarshadeSilvaMP) April 4, 2023