காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த சமுத்திராதேவி ரயிலின் இயந்திரம் தனியே பிரிந்து சென்றிருந்த நிலையில், இது தொடர்பான CCTV காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
இன்று (09) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அப்போது ரயிலின் இயந்திரம் ரயிலில் இருந்து பிரிந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு தனியே பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.