அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த போராட்டதை கலைக்க பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.