லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க
தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி நாளை (04) நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் நிறை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் சுமார் 1000 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
அதற்கமைய, புதிய விலையாக 3,743 ரூபாவாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.