உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்
ஜனாதிபதி உயிர்த்தஞாயிறு தினத்தை குறிக்கும் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்படும் என உறுதியளித்துள்ள ஜனாதிபதி சட்டநடவடிக்கைகள் சுயாதீனமாகவும் பக்கச்சார்பின்றியும் எவரது செல்வாக்கின்றியும் முன்னெடுக்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் போன்ற கொடுரமான செயல்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனது தளர்ச்சியற்ற உறுதிப்பாட்டையும் ஜனாதிபதி தனது செய்தியில் வெளியிட்டுள்ளார்.
உயிர்த்தஞாயிறுதாக்குதலால் ஏற்பட்ட வலியும் வேதனையும் இன்னமும் உங்கள் மனதில் ஆறாமல் இருப்பதை நான் அறிவேன் நான் அந்த வேதனையi பகிர்ந்துகொள்கி;ன்றேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் சுயாதீனமாகவும் பக்கச்சார்பற்ற முறையிலும் எவருடைய செல்வாக்கிற்கு உட்படாத வகையிலும் முன்னெடுக்கப்படுகின்றன என்ற உத்தரவாதத்தை நான் உங்களிற்கு வழங்குகின்றேன் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.