டொலரின் பெறுமதி வீழ்ச்சி, எரிபொருள் விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தற்போது மின்சார உற்பத்திச் செலவு குறைந்துள்ளதாகவும், எனவே நூற்றுக்கு 30 வீதம் மின்சார கட்டணத்தை குறைக்க முடியுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கடிதம் மின்சார சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டார்.