மிரிஹானயில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவினர் மிரிஹான - ஜூபிலிகணுவவிற்கு அருகில் நேற்று (31) மாலை போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது, சமூக செயற்பாட்டாளர்களான அனுருத்த பண்டார , டானிஷ் அலி உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.