சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (ஏப்ரல் 10) தெரிவித்தார்.
இதன்படி அமைச்சுக்களின் செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஆணைக்குழுக்களின் தலைவர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோரை சந்திக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நுவரெலியா நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியாது என பலர் நினைத்தாலும், சர்வதேச நாணய நிதியமும் அரசாங்கமும் செய்துகொண்ட உடன்பாட்டின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தின் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்த அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
2025ஆம் ஆண்டளவின் நாட்டின் அபிவிருத்தித் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பையும் பெறுவதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்தார்.