மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் இதுவரை எந்த யோசனையும் வரவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் தற்போது பல்வேறு பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.