Our Feeds


Thursday, April 27, 2023

ShortNews Admin

இளைஞனை கடத்திச்சென்ற கும்பல் - அதிரடியாக களமிறங்கி மடக்கிப் பிடித்தார் பொலிசார்



இளைஞர் ஒருவரை கடத்திச்சென்ற கும்பலை பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று மடக்கிப் பிடித்துள்ள சம்பமொன்று மத்துகம பிரதேசத்திலிருந்து பதிவாகியுள்ளது.


மீகஹதென்ன, தியபத்துகம பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.


குறித்த இளைஞனின் வீட்டிற்கு பெண் ஒருவருடன் மூன்று பேர் நேற்றிரவு வந்து அவரை கடத்திச் சென்றுள்ளனர்.


பின்னர், கடத்தப்பட்ட இளைஞனுடன் சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்த போது, ​​மத்துகம நகரின் மையப்பகுதியில் உள்ள வீதித் தடுப்பில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.


கடத்தப்படுவதாக அந்த இளைஞன் கூச்சலிட்ட போது பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது.


பணத் தகராறு காரணமாக இந்த கடத்தல் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மீகஹதென்ன பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட பெண் வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், ஏனைய சந்தேகநபர்கள் தெஹிவளை, கிருலப்பனை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »