பாடசாலை மாணவர்களின் காலணிகள், பைகளின் விலை குறைவடைந்துள்ளதாக பாடசாலை பை மற்றும் காலணி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் நேற்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் பாடசாலை பை மற்றும் காலணி உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மே 23ஆம் திகதிக்கு பின்னர் இந்த பொருட்களின் விலையை 500 முதல் 1000 ரூபா வரை குறைப்பதற்கு உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டொலரின் பெறுமதி குறைந்துள்ளதால், பாடசாலை பை, காலணிகள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை குறைந்துள்ளதால், அதன் பயனை பாடசாலை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென உற்பத்தியாளர்களிடம் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.