பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் சந்தையில் மரக்கறிகள் தவிர்ந்த ஏனைய பொருட்களின் விலைகள் இதுவரை குறைக்கப்படவில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதற்கிடையில், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் சேவை அதிகாரசபையினர் திடீர் சோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், கொழும்பில் உள்ள 05 பல்பொருள் அங்காடிகள் உட்பட 15 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக இன்று (09) சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சித்திரைப் புத்தாண்டு பிறக்க இன்னும் 5 நாட்கள் உள்ளன. எனவே, மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்ற அதிகளவில் நகருக்கு வருவதுடன், அவர்களுக்கு இதர வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
அதன்படி, நுகர்வோரை ஏமாற்றி அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.