உடஹெந்தென்ன, பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஏழு வயதுச் சிறுமி ஒருவர் அதிகளவு பரசிட்டமோல் மாத்திரையை உட்கொண்டதன் விளைவாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடஹெந்தென்ன, உடுவெல்ல தாமரவல்லி கொலனியில் வசிக்கும் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் சிறுமிமேய இவ்வாறு உயிரிழந்தார்.
கம்பளை குருந்துவத்தை வைத்தியசாலையில் இருந்து இரண்டு தடவைகள் அவருக்கு பெற்றோர்கள் மருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.
வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவிற்குப் பதிலாக வைத்தியசாலையின் மருந்தகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட வயது வந்தோருக்கான டோஸ் சிறுமிக்கு வழங்கப்பட்டதால், சிறுமிக்கு அதிக டோஸ் கிடைத்ததையடுத்து சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.