Our Feeds


Wednesday, April 5, 2023

Anonymous

உலகில் ஆறு ஆண்களில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு

 



உலகளவில் ஆறு பேரில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை தொடர்பான பிரச்சனைகள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். 


உலகளாவிய சுகாதார அமைப்பு கருவுறுதல் பராமரிப்புக்கான அணுகல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பங்கேற்றுள்ளார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,


'உலகளவில் ஆறு பேரில் ஒருவர் குழந்தை பெற இயலாமையால் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பாதிக்கப்படுகின்றனர். 


உலகளவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 17.5 சதவீதம் பேர் மலட்டுத்தன்மை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


பணக்கார நாடுகளில் 17.8 சதவீதம் பேரும், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் 16.5 சதவீதம் பேரும் குழந்தை பெற இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இந்த பிரச்சனையானது உலகளவிலான மிகப்பெரிய சுகாதார துறை சவாலாக மாறியுள்ளது.


பல நாடுகளின் தரவுகள் இல்லாததால், முழுமையான விபரங்கள் கிடைக்கவில்லை. 


எனவே இனப்பெருக்க சுகாதார கொள்கைகள், சேவைகள் மற்றும் நிதியுதவி போன்றவற்றை குழந்தையின்மை சிகிச்சையில் சேர்க்க வேண்டும்' என்று கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »