எதிர்வரும் மாதத்தில் புதிய அரசியல் கட்சியை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், குறித்த கட்சிக்கு ஐக்கிய குடியரசு முன்னணி (எக்சத் ஜனரஜ பெரமுன) என பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.