இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ரியாவில் உள்ள இந்திரகிரி ஹிலிர் என்ற துறைமுக பகுதியில் இருந்து ரியாவ் தீவின் தலைநகரான தஞ்சோங் பினாங்குக்கு பயணிகள் படகு ஒன்று புறப்பட்டுள்ளது.
இந்த படகில் 80-க்கும் மேற்பட்டவர்கள் பயணித்துள்ளனர்.இந்த படகு புளாவ் புருங் என்ற இடத்துக்கு அருகே உள்ள கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த சம்பவம் குறித்து கடலோர பொலிஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் மீட்பு படையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
11 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் கடலில் மாயமாகியுள்ளனர். எனவே பலியானோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகின்றது.
எனினும் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.