சாமிமலை நகரின் பிரதான வீதியில் கிடந்த அரை பவுண் மதிப்புள்ள மோதிரத்தை கண்டெடுத்த வர்த்தகர், உரிமையாளரிடம் கையளித்துள்ளார்.
சனிக்கிழமை (08) கண்டெடுத்த மோதிரத்தை வர்த்தகரான ஷாமிந்த ஒமதுவவிதான (வயது 51), அதே நகரத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும், கே.எஸ் ராஜூபாலனுடைய மனைவியின் மோதிரத்தையே கண்டெடுத்து ஒப்படைத்துள்ளார்.
சுமார் ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மோதிரத்தை கண்டெடுத்த வர்த்தகர், அதுதொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததன் பின்னர் திங்கட்கிழமை (10) உரியவரிடம் கையளித்துள்ளார்.
செ.தி பெருமாள்