உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் அனைவருக்கும் அடிப்படை சம்பளம் வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.