பயறு மற்றும் சிவப்பு சீனி ஆகியனவற்றுக்கான இறக்குமதி தடையை நீக்கி நாட்டிற்கு இறக்குமதி செயற்வதற்கு அனுமதியை பெற்றுத்தருமாறு அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிவப்பு சீனி மற்றும் பயறு ஆகியனவற்றிற்கு சந்தையில் நிலவும் அதிக விலையை கருத்தில் கொண்டு இறக்குமதிக்கு அனுமதியளிக்குமாறு அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த இரு அத்தியாவசிய பொருட்களுக்கும் சுங்க வரிவிதிப்பினை மேற்கொண்டேனும் இறக்குமதிக்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் புறக்கோட்டையில் 10 முதல் 12 சதவீதம் வரை பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.