ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைப்பதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசிக்கையில் ட்ரம்ப், “நான் குற்றம் செய்யவில்லை” என்று மட்டுமே பதிலளித்தார்.
இதனிடையே, ட்ரம்பின் கைது நடவடிக்கை குறித்து வெள்ளைமாளிகை நிர்வாகம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. நீதிமன்ற விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிப்பது முறையாக இருக்காது என்றே வெள்ளைமாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர்களாக பதவி வகித்தவர்களில் குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்ட முதல் நபர் டொனால்டு ட்ரம்ப்.