Our Feeds


Wednesday, April 26, 2023

ShortNews Admin

உக்ரைன் ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சீன அதிபர்!



சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தன்னுடன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே கடுமையான போர் நடைபெற்று வருகின்றது. இதனால் உக்ரைனின் பெரும் பகுதி ரஷ்ய இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 


உலக நாடுகள் போருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றன. 


சீனா எப்போதும் ரஷ்யாவுடனான நெருங்கிய தொடர்பிலிருந்து வருகின்றது, தற்போது கூட சின ஜனாதிபதி ரஷ்யாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். 


இந்நிலையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசியதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.


தொலைபேசி அழைப்பின் போது சீன ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் பேச்சுவார்த்தை தான், போரிலிருந்து வெளியேற ஒரே வழி என்று கூறியதாக அந்நாட்டின் ஊடகமான ஊஊவுஏ தெரிவித்துள்ளது.


உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடனான போரில் சீனா அதிகாரப்பூர்வமாக நடுநிலை வகித்தாலும், ரஷ்ய படையெடுப்பை சீன ஜனாதிபதி ஒரு போதும் கண்டித்ததில்லை. 


மேலும் ஜெலென்ஸ்கி, சீனப் பிரதிநிதியான ஜி ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பலமுறை கூறியுள்ளார்.


ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நான் நீண்ட மற்றும் அர்த்தமுள்ள தொலைபேசி உரையாடலில் கதைத்தேன். இந்த அழைப்பும், சீனாவுக்கான உக்ரைனின் தூதர் நியமனமும் நமது இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு சக்திவாய்ந்த உத்வேகத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »