Our Feeds


Friday, April 28, 2023

News Editor

காலாவதியான கண்ணீர்ப் புகைக் குண்டுகளை அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்தல்


 நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில், காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகளை சேகரித்து அப்புறப்படுத்துமாறு கோபா எனப்படும் பாராளுமன்ற பொது கணக்குகளுக்கான குழு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.


இந்தநிலையில், காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவை ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது எனவும் உயர் பொலிஸ் அதிகாரிகள், கோபா குழுவிடம் தெரிவித்துள்ளனர்.


மேலும், சர்வதேச மரபுகளுக்கு அமைவாக, பொதுக் கலவரங்கள் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று கோபா குழுவின் தலைவர் லசந்த அலகியவன்ன பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


அத்துடன், பொலிஸ் திணைக்களத்தின் அடுத்த உத்தேச வேலைத்திட்டத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்குமாறும் அவர் பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »