உடலில் ஒரு பொட்டு துணி இல்லாமல், இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து, பெறுமதியான பொருட்களை கொள்ளையிடும் நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.
களுத்துறை பிரதேசத்திலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த சில நாட்களுக்குள் பல வீடுகள் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
வீடுகளுக்குள் புகும் இந்த நபர், முழு நிர்வாணமாக வீடுகளுக்குள் சுற்றிதிரியும் காட்சிகள், சிசிரிவி கமெராக்களில் பதிவாகியுள்ளன. அதனை வைத்து, சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.