தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.
அந்நாட்டில் உள்ள பின்ஸ்ஹாபன் நகரில் இருந்து 33 கிலோமீற்றர் வடமேற்கில் பிஸ்மார்க் கடல் பகுதியில் சுமார் 55.5 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.