பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம், சிங்களமயமாக்கலை எதிர்த்து வடக்கு, கிழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை (25) பூரண ஹர்த்தால் இடம் பெற்று வரும் நிலையில் கல்முனை பொதுச் சந்தை இன்று வழமை போல் இயங்கியது
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக தமிழ்க் கட்சிகள் கடையடைப்பு ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ்க் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தபோதிலும் கல்முனை பிரதேசத்தில் கல்முனை பொதுச் சந்தை உட்பட பொதுப் போக்குவரத்து, அரச நிறுவனங்கள் ஆகியன வழமை போன்று இயங்கியதை காணக்கூடியதாக இருந்தது.