Our Feeds


Sunday, April 2, 2023

News Editor

ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கி வருவதாக வடகொரியா மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டு


 உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு அதன் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான வடகொரியா ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. 


ஆனால் வடகொரியா அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வரும் சூழலில் ரஷ்யா வடகொரியாவுக்கு உணவு பொருட்களை வழங்கி அதற்கு ஈடாக ஆயுதங்களை பெற முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. 


இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கையின் ஊடகப் பேச்சாளர் ஜான் கெர்பி தெரிவிக்கையில்,


 'வடகொரியாவுக்கு ஒரு பிரதிநிதிகள் குழு அனுப்ப ரஷ்யா முயல்கிறது என்பதையும்இ ஆயுதங்களுக்கு ஈடாக உணவு பொருட்களை ரஷ்யா முடிவு செய்திருப்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம். 


வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எந்தவொரு ஆயுத ஒப்பந்தமும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறக்கூடியது ஆகும். 


ஒப்பந்தத்தின் நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகின்றது' என்றார். 


எனினும் இது குறித்து வடகொரியா மற்றும் ரஷ்யா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »