அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாதத்திற்கான அரச ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்கப்படும் என அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக 135 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எரிபொருள் விலை குறைப்பின் பலனை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கட்டணங்களை குறைக்குமாறு நிதியமைச்சு கோரியுள்ளது.