கல்ஓயா பகுதியில் இயங்கிவரும் தஹம் பாடசாலை (பௌத்த மத அறநெறி) ஒன்றில் வாள்வெட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கல்ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் இயங்கி வரும் தஹம் பாடசாலையில் 11 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
இன்று (02) காலை 7.45 மணியளவில் ஆலய வளாகத்தினுள் நுழைந்த நபர் இமாஷா என்ற மாணவியை கூரிய ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கல்ஓயா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்துடன் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த மாணவி தற்போது கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அவருடன் காதல் உறவு கொள்ள மறுத்ததால் இவ்வாறு வாள்வெட்டு சம்பவத்தை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.