பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக அரசியல் - தொழிற்சங்க - சமூக - மற்றும் சர்வதேச செயற்பாட்டாளரான பாரத் அருள்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான நியமனம் இன்று (03) வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக காந்தி சௌந்தராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான நியமனம் இன்று (03) வழங்கப்பட்டுள்ளது.
காந்தி சௌந்தராஜன் இதற்கு முன்னர் பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அதிகார சபையின் தலைவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.