அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற அலுவலகக் கட்டிடத் தொகுதிக்கு தீ மூட்டியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று நீதவான் M.H.M.ஹம்சா முன்னிலையில், மெய்நிகர் தொழில்நுட்பத்தினூடாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களை எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டுள்ளார்.