ஜா-எல பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் ஜீப் மீது ஆபாச வார்த்தைகளை எழுதியதாக கூறப்படும் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யத் தேடப்படும் பொலிஸ் அதிகாரி தற்போது பணிக்கு வராமல் தலைமறைவாக உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் ஜீப்பிலிந்து பெறப்பட்ட கைரேகைகளுடன் குறித்த அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன.
இதன்போது பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கைரேகைகள் மற்றும் ஜீப்பிலிருந்து பெறப்பட்ட கைரேகைகளுடன் ஒத்துப் போவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.