தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு சிறுவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தேசிய பாடசாலைகளில் 2 முதல் 4 மற்றும் 7 முதல் 10 வரையிலான இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை குறித்து ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பிறகு தேசிய பாடசாலைகளுக்கு அறிவிக்கப்படும்.
அதுவரை தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு பிள்ளைகளை உள்வாங்குவதற்கான கடிதங்களை கல்வியமைச்சு வழங்காது எனவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.