கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் பீட்டர் ஹப்பு ஆராச்சி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது சடலம் வண்ணாத்தவில்லு பிரதேசத்தில் உள்ள அவரது தென்னந்தோப்புக் காவல் வீட்டில் மீட்கப்பட்டுள்ளதாக வண்ணாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் நேற்றுக் (29) காலை வண்ணாத்தவில்லுவ பிரதேசத்தில் உள்ள தனது காணிக்கு தேங்காய் பறிப்பதற்காக சென்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான பீட்டர் ஹப்பு ஆராச்சி இறக்கும் போது 76 வயதாகும், மேலும் அவர் முன்னாள் அதிபர் ஆவார்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.