அளுத்கம நகரில் பெண்கள் அழகு நிலையமொன்றை நடாத்தும் பெண்ணொருவர் அந்நிலையத்திற்கு தேவையான மின்சாரத்தை பல மாதங்களாக சட்டவிரோதமான முறையில் பெற்றுவந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த பெண்ணை மின்சார தனியார் நிறுவனத்தின் மோசடி விசாரணைப் பிரிவினருடன் இணைந்து அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இவரை களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் அளுத்கம தலைமை அலுவலகம் மற்றும் அளுத்கம பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினரே இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.