ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் அடுத்தவருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் என்பது குறித்தும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுபான்மை கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்தவாரம் இடம்பெற்ற சந்திப்பில் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க தான் தேர்தலில் போட்டியிடக்கூடும் எனவும் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
நாடு சில மாதங்களிற்கு முன்னர் ஒப்பிடுகையில் சிறந்த நிலையில் உள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி பொருளாதாரம் ஸ்திரநிலைக்கு திரும்பியதும் நான் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்து தேர்தலிற்கு அழைப்பு விடுப்பேன் என தெரிவித்துள்ளார்