இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு தொகுதி முட்டைகள் நேற்று (04) இரவு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதுவரை 04 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார். கடந்த 23 ஆம் திகதி முதல் தடவையாக 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், சுமார் 4 நாட்களுக்கு முன்னர் மேலும் 1 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த முட்டை இருப்பு விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. நேற்றிரவு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று (05) ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை சாதாரண நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். |