அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளேன் என ஜனாதிபதி ஜோ பைடன் கூறி வந்த நிலையில், அதற்கான அறிவிப்பை இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஒவ்வொரு தலைமுறைக்கும் ஜனநாயகத்திற்கு துணை நிற்க வேண்டிய தருணம் இருக்கும். அவர்கள் தங்களது அடிப்படை சுதந்திரத்திற்காக நிற்க வேண்டி இருக்கும். இது நம்முடையது என நான் நம்புகிறேன் என ட்விட்டரில் பைடன் தெரிவித்துள்ளார்.
அதனாலேயே, நான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட இருக்கிறேன். எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். நாம் வேலையை முடிப்போம் என்று அதில் தெரிவித்துள்ளார்.