ஹர்ச டி சில்வா உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனரட்ண தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானமொன்றை எடுக்காவிட்டால் ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவாக ஜனாதிபதியை ஆதரிக்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யார் என்னசொன்னாலும் ஹர்ச டி சில்வா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பார்கள் என தெரிவித்துள்ள ராஜித சேனரட்ண கட்சி தீர்க்கமான முடிவை எடுக்காவிட்டால் நாங்கள் குழுவாக பணியாற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
பலர் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகின்றனர் ஆனால் தேர்தலில் அவருக்கு எதிராக செயற்பட்டதால் தயக்கம் கொண்டுள்ளனர் என ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் கொள்கை வேறுபாடுகள் இல்லை என தெரிவித்துள்ள அவர் கொள்கை வேறுபாடுகள் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்து செல்லவில்லை மாறாக ரணில் விக்கிரமசிங்கவின் முடிவெடுக்கும் பாணியில் அதிருப்தி காரணமாகவே பிரிந்து சென்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி நாட்டை முன்னரை விட சிறந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளார் என்ற கருத்து யதார்த்தபூர்வமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.