கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 35.3 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த திணைக்களம் வெளியிட்ட அறிக்கைக்கு அமைவாக, மார்ச் மாதத்தில் பணவீக்கம் 50.3 சதவீதமாக பதிவாகியுள்ளது.
உணவு வகை பணவீக்கம் மார்ச் மாதத்தில் 50.3 சதவீதமாக இருந்ததோடு, ஏப்ரலில் 30.6 சதவீதமாக குறைந்துள்ளது.
மார்ச் மாதத்தில் 51.7 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 37.6 சதவீதமாக குறைந்துள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.